படகு தள பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி : அமைச்சர் ஜெயக்குமார்

Dec 06, 2018 02:32 PM 79

சென்னை காசிமேடு கடற்கரையில் மீனவர்களின் வசதிக்காக புதிய விசைபடகுகள் மற்றும் பைபர் படகுகள் தளம் கட்டப்படவுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காசிமேடு பகுதியில் விசைபடகுகள் மற்றும் பைபர் படகு தள கட்டட பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசிமேடு பகுதியில் விசைபடகுகள் மற்றும் பைபர் தளம் கட்டுவதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இந்த படகு தளத்தின் மூலம் மீனவர்களின் சிரமம் குறையும் என்றும் கூறினார்.

Comment

Successfully posted