நாமக்கல்லில் உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Feb 10, 2019 05:19 PM 143

பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர், பூஜை பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, 10 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தாருக்கு, திருக்கோயில் நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், உயிரிழந்த அர்ச்சகர் வீட்டிற்கு, அமைச்சர் தங்கமணி சென்று, ஆறுதல் கூறினார். பின்னர், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர், அவர்களிடம் வழங்கினார்.

Comment

Successfully posted