வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5000 வரை உதவித்தொகை- ராஜஸ்தான் தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி

Nov 27, 2018 05:37 PM 943

ராஜஸ்தானில் வேலையில்லா இளைஞர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மும்முரமாக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஜெய்ப்பூரில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் துறையில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், புதிய சாலைகளை கட்டமைப்பதன் மூலம் கிராமங்கள் அனைத்தும் இணைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted