ரூ.61 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளியின் முன்னாள்நிர்வாகிகள்

Feb 13, 2019 06:39 AM 201

திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 61 லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியில் செயலாளராக பணியாற்றும் மாணிக்கம் என்பவர், முன்னாள் நிர்வாகிகளாக இருந்த பாலச்சந்திரன், காமராஜ், கண்ணன் ஆகியோர் 61 லட்சம் ரூபாய் பண முறைகேட்டில் ஈடுபடுள்ளதை கண்டறிந்தார். இது தொடர்பாக முன்னாள் நிர்வாகிகளிடம் கேட்ட போது, மூவரும் சரியான விளக்கம் அளிக்காமல் மாணிக்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணிக்கம் காவல் துறையில் புகார் அளித்ததையடுத்து, 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், பாலசந்திரனை கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகிறனர்.

Comment

Successfully posted