டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Oct 23, 2019 08:15 PM 74

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டையில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் இந்த பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மை மற்றும் பொது சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொசுக்கள் உற்பத்தியாகி வந்தது. இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த தொழிற்சாலைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Comment

Successfully posted