60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி : ராமதாஸ் வரவேற்பு

Feb 11, 2019 06:53 PM 135

அரசு அறிவித்துள்ள அடிப்படை வருமான திட்டம், தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comment

Successfully posted

Super User

பொங்கல் சிறப்பு உதவியாக எல்லா குடும்பங்களுக்கும்1000ரூபாய் இப்போது அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரு க்கும்2000ரூபாய் உதவி பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலை யில்லாசைக்கிள்மடிக்கணனி சீருடை புஸ்ததம் காலனி பொதுமக்கள்பயன்பாட்டிற்காக அம்மாஉணவகம்இப்படியாகபலலட்சம்கோடியைமக்களுக்காகபயண்படும்படிசெலவசெய்கிறது அதிமுக அரசு.இப்படிப்பட்ட பணம்முழுவதும் கருணாநிதி ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றி உள்ளது. எனவே இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்