வடபழனி பணிமனையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு

Aug 25, 2019 09:10 PM 250

சென்னை வடபழனி பேருந்துப் பணிமனையில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சேகர், பாரதி ஆகியோரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா இரண்டு லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தோருக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும், சாதாரணக் காயம் அடைந்தவர்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted