திருச்சி விமான நிலையத்தில் ரூ. 3.45 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Feb 03, 2019 10:04 PM 260

திருச்சி விமான நிலையத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த குணாலன் எல்லப்பன் என்பவரை சோதித்தனர். அப்போது, அவர் 108 கிராம் எடையுள்ள இரண்டு தங்க மோதிரங்கள், 2 தங்க வளையல்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

Comment

Successfully posted