புதுச்சேரி திறந்திருந்த ஏ.டி.ஏம் இயந்திரத்தில் இருந்து ரூ. 4 லட்சம் கொள்ளை : பெண் கைது

Dec 30, 2018 07:03 AM 484

புதுச்சேரியில் திறந்திருந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு இளம்பெண் ஒருவர் பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம் இயந்திரம் திறந்து இருந்ததால் அதிலிருந்த 4 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர் சரியாக பூட்டாத காரணத்தினால் பணம் எடுக்க வந்த பெண் ரூபாயை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பெங்களூருவைச் சேர்ந்த சித்ராவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted