ரூ.29 ஆயிரத்தை நெருங்கியது ஆபரணத்தங்கத்தின் விலை

Aug 13, 2019 05:01 PM 134

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 29 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு 9 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 612 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து உயர்ந்து 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு 9 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 769 ரூபாய்க்கும், சவரன் 72 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 48 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 900 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted