ஓடும் ரயிலில் மயக்க பிஸ்கட்டுகள் கொடுத்து நகைகள் கொள்ளை

Apr 15, 2019 05:53 PM 98

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மயக்கம் பிஸ்கட்டுகள் கொடுத்து நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

எஸ்வந்த்பூரில் இருந்து டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி ரயிலில் இருந்து வாரங்கல் மாவட்டத்தில் உள்ள காஜிபேட்ட ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அடையாளம் தெரியாத நபர் மயக்க பிஸ்கட் கொடுத்து நகைகள் மற்றும் உடைகளை எடுத்துச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காஜிபேட் வந்த அந்த ரயிலை நிறுத்தி ஆய்வு மேற்கொண்ட ரயில்வே போலீசார், மயக்க நிலையில் இருந்த 6 பேரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நகைகள் மற்றும் பணம் கெங்ளளை போனது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted