ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து முன்னுரிமை -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Feb 13, 2020 04:07 PM 530

மத்திய அரசு செயல்படுத்து வரும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும், நடவடிக்கைகளுக்கு தமிழ் நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்று  குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் உள்ளாட்சிக்கு நிர்வாகத்திற்கு தேவைப்படும் 609 கோடியே 18 லட்ச ரூபாய் நிதியை முதற்கட்டமாக வழங்கவும், அதேபோல் 2 ஆயிரத்து 939 கோடி ரூபாய் நிதியை 2 ஆம் கட்டமாக வழங்கவும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Comment

Successfully posted