இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்கும் பணியில் ரஷ்யா மும்முரம்!

Jun 25, 2020 09:52 PM 2549

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பாதுகாப்பு கருவிகளை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லை பிரச்னையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், போர் தளவாடங்களை வாங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா போர் கருவிகளை பெற முடிவு செய்துள்ளது. ரஷ்யா சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுதொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து 2 அல்லது 3 மாதங்களில் போர் கருவிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும், போர் உபகரணங்களை வழங்கும் பணிகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comment

Successfully posted