ரஷ்யா-வடகொரியா நாட்டு அதிபர்கள் விரைவில் சந்திப்பு

Apr 16, 2019 01:29 PM 59

ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபரின் 2-வது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், 3-வது உச்சி மாநாட்டிற்கு இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வரும் 24-ம் தேதி வடகொரியா செல்கிறார். இந்த பயணத்தின்போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted