நீதிபதி உத்தரவு- SBI-ATM-கொள்ளையன் வீரேந்தர் ராவத்தின் தற்போதைய நிலை என்ன?

Jun 28, 2021 07:40 AM 995

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

image

எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்து தப்பியோடிய வடமாநில கும்பலை சேர்ந்த அமீர் அர்ஷ் ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அதே கும்பலை சேர்ந்த வீரேந்தர் ராவத் என்பவரும் பிடிபட்டார். வீரேந்தர் ராவத்தை விமானத்தில் சென்னை அழைத்துவந்த தனிப்படை போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

image

வீரேந்தர் ராவத்தை ஜூலை 9ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி கெளதமன் உத்தரவிட்டார். இதையடுத்து வீரேந்தர் ராவத் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அமீர் அர்ஷைப் 5 காவலில் எடுத்துள்ள தனிப்படை போலீசார், வீரேந்தர் ராவத்தையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

image


Comment

Successfully posted