பொதுப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் - உச்ச நீதிமன்றம்

Nov 29, 2018 03:27 PM 238

பொதுப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது பிரிவினருக்கான வயது வரம்பு தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பொது பிரிவினருக்கான வயது வரம்பு 25 என்ற நிலையில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் தேர்வு எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இட ஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில் பொது பிரிவினருக்கும் சலுவை வழங்கப்பட்டுள்ளது.

நாளையுடன் நீட் தேர்வு காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted