கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் வழக்கில் நவ. 13ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம்

Nov 09, 2019 10:54 PM 67

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் போது, 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 பேரின் பதவியை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் பறித்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் நவம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted