என்.எச். சாலைகளில் அரசியல் கட்சி பேனர்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Jan 11, 2019 03:06 PM 152

தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைக்க தடை விதிப்பது குறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பேனர்கள் வைப்பதை ஒழுங்கு படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சமீபத்தில் பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகளையும் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டது.

இந்தநிலையில், யானை ராஜேந்திரன் என்பவர் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைக்க தடை விதிப்பது தொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted