சதிஷ் சானாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Oct 30, 2018 03:00 PM 449

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக புகார் அளித்த சதிஷ் சானாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச புகாரை அடுத்து சிபிஐ சிறப்பு இயக்குநராக பதவி வகித்து வந்த ராகேஷ் அஸ்தானா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் புகார்தாரரான சதிஷ் சானா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து சிபிஐ அதிகாரியான ஏ.கே.பஸ்ஸி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் பொறுப்பேற்றதும், 13 அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதில் ஏ.கே.பஸ்ஸியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted