நிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Jan 20, 2020 07:33 AM 211

நிர்பயா பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கின் குற்றவாளிகளான வினய் சர்மா, முகேஷ் குமார், அக்ஷய் குமார் சிங், பவன்குமார் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பவன் குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். அதில், 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடைபெற்ற போது தாம் சிறுவனாக இருந்ததாகவும், தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கிறது. ஏற்கனவே பவன் குமார் குப்தாவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, இந்த புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Comment

Successfully posted