தொண்டாமுத்தூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அமோக வெற்றி

May 03, 2021 07:52 AM 424

தொண்டாமுத்தூர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அமோக வெற்றி பெற்றார்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், ஒவ்வொரு சுற்றிலும் தனது வெற்றியை நிரூபித்து வந்தார்.

34 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் முடிவில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை விட, 41 ஆயிரத்து 709 வாக்குகள் கூடுதலாக பெற்று எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி 1 லட்சத்து 23 ஆயிரத்து 538 வாக்குகளையும், கார்த்திகேய சிவசேனாபதி 81 ஆயிரத்து 829 வாக்குகளையும் பெற்றனர்.

இதன் மூலம் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.

இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் வெற்றியை அதிமுக உறுதி செய்துள்ளது.

இதனால், 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை போன்று, கோவை மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது.

Comment

Successfully posted