வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது

May 12, 2020 07:43 AM 875


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி கோயில் நடை திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணியளவில், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறும். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comment

Successfully posted