சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!

Jul 31, 2020 04:57 PM 232

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்.

இதய நோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எழுத்தாளர் கந்தசாமி, இன்று காலை மரணம் அடைந்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940ம் ஆண்டு பிறந்த இவர், சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக, 1998ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக பணியாற்றிய கந்தசாமி, திரைப்பட தணிக்கைக்குழுவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted