வாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Apr 20, 2019 10:47 AM 99

சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

சேலம் மக்களவை தேர்தலில் 77.39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சேலம் - பெங்களூரு சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மாவட்ட ஆட்சியர் ரோகினி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டது.

Comment

Successfully posted