சேலம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: மூன்று தனிப்படைகள் அமைப்பு

Dec 13, 2019 06:34 PM 462

சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் குரங்குச்சாவடியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ தங்கம், 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted