தண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா

Jul 18, 2019 05:31 PM 253

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கில் தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். சமீபத்தில் அவர நடிப்பில் “ஓ!பேபி” படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ள “பக்கெட் சவால்” செய்ய நடிகை சமந்தா ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹைதராபாத்” தண்ணீரின்றி வறண்டு கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்ட போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21ம் தேதி) யார் என்னுடன் “ One bucket challenge”காக இணைகிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.


மேலும் நீண்ட நேரம் குளிக்கவோ, வாகனங்களை கழுவவோ, குழாய்களில் முகம் கழுவும் போது தண்ணீரை வீணாக்கவோ செய்யக்கூடாது எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

நீல நிற வாளியோடு தான் கண்டிப்பாக புகைப்படத்தை பதிவிடுவேன் என்றும், யாரும் ஏமாற்றக்கூடாது என #everydropcounts ஹேஸ்டேக்கோடு பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted