அக்னி ஆற்றுப்படுகையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி, ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

May 10, 2021 05:21 PM 122

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அக்னி ஆற்றுப்படுகையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி, ஆட்சியர் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்னி ஆற்றுப்படுகையில் மணல் நடைபெற்று வரும் நிலையில், இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியர் உமா மகேஸ்வரி இல்லத்தை 50-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

தகவலறிந்து வந்த காவல்துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Comment

Successfully posted