சந்தியா கொலை விவகாரம் : குப்பை கிடங்கில் தொடரும் தேடுதல்...

Feb 10, 2019 11:29 AM 100

கணவரால் கொலை செய்யப்பட்ட துணை நடிகை சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்களை பெருங்குடி குப்பைக் கிடங்கில் 5வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மாதம் 21ஆம் தேதி பெருங்குடி குப்பைக்கிடங்கில் வெட்டப்பட்ட கை மற்றும் கால்கள் மீட்கப்பட்டன. போலீசாரின் தீவிர விசாரணையில், கொல்லப்பட்டது சந்தியா என்பதும் அவரது கணவரால் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பதும் தெரிய வந்தது.

துணை நடிகையாக இருந்த சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு படுகொலையை பாலகிருஷ்ணன் நிகழ்த்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் சந்தியாவின் பல்வேறு உடல் பாகங்களை மீட்டனர். தற்போது பாலகிருஷ்ணன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சந்தியாவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர். சந்தியாவின் கால்கள் கிடந்த பெருங்குடி குப்பை கிடங்கில், 5வது நாளாக மோப்ப நாய் டைசன் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

தனிப்படை காவலர்கள் 10 பேர், மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர், 4 ஜே.சி.பி, பொக்லைன் இயந்திரம் கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் சந்தியாவின் உடலில் இருந்து மரபணுவை எடுத்து அதை சந்தியாவின் பிள்ளைகளின் மரபணுவோடு ஒப்பிட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Comment

Successfully posted