மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் சானியா மிர்சா

Nov 29, 2019 11:16 AM 720

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீண்டும் விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார்.

டென்னிஸ் போட்டிகளில் வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட பின் தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வளித்தார். பின் அவருக்கு குழந்தை பிறந்ததால் முழு நேரத்தையும் குழந்தைக்காக செலவிட்ட சானியா தற்போது மீண்டும் டென்னிஸ் விளையாட இருக்கிறார்.

கிட்டதட்ட 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார். சர்வதேச ஹாபர்ட் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ள இந்த தொடரில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும், அதேபோல், அடுத்த ஆண்டே டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராகி வருவதாகவும் சானியா கூறியுள்ளார்.

Comment

Successfully posted