பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பு

Oct 20, 2019 08:56 AM 94

நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் என்பருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், தேர்தல் இயந்திரங்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு பரிசோதித்து காண்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted