கல்லூரி மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Jan 11, 2022 04:51 PM 4026

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், கல்லூரிகளுக்குவரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து பி.இ, கலை-அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.


Comment

Successfully posted