திருத்தணி அருகே காணாமல் போன பள்ளி மாணவி எழும்பு கூடாக மீட்பு

Feb 11, 2019 12:24 PM 180

திருத்தணி அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போன பள்ளி மாணவி ஒருவர், விவசாய கிணற்றில் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த புது வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கீச்சளம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் எழும்பு கூடு கிடப்பதாக வந்த தகலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாயமான மாணவி சரிதா என்பதை உறுதி செய்தனர். கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related items

Comment

Successfully posted