40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை தயார் செய்து பள்ளி மாணவர்கள் சாதனை

Nov 15, 2019 09:12 AM 77

சென்னையில், நாற்பது நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை தயார் செய்து சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கல் அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் இணைந்து நாற்பது நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயார் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மனிதம் என்ற வடிவில் மாணவ மாணவிகள் விதை பந்துகளை தயாரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 600 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டிய யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து சாதனை சான்றிதழை வழங்கி பெருமைபடுத்தியது. இதற்கு முன்பாக மூன்றாயிரம் பேர் இணைந்து 15 நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகள் தயாரித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நேர்முக உதவியாளர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted