குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த கடல் நீர்

May 16, 2021 12:41 PM 527

அரபிக்கடலில் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ்-தே புயல் கேராளாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கடல் சீற்றம் காரணமாக கொச்சி, மலப்புறம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. ஆளுயரத்திற்கு எழுந்த அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள பகுதிகளில் புகுந்து குடியிருப்புகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளன. இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக பாதிப்புகளை சந்தித்து வரும் கேரளா வருகிற நாட்களில் பெருத்த சேதத்தை சந்திக்க கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Comment

Successfully posted