ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

Feb 13, 2020 03:31 PM 884

ராமநாதபுரம் மாவட்டம் சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருளை கைப்பற்றிய கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் சுமார் 4 அடி உயரம் மற்றும்  2 அடி அகலத்தில், மூன்று சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட மர்மப்பொருள் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் மர்மப் பொருளை எடுத்து கரையில் பாதுகாப்பாக  வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர், மீனவர்களிடம் இருந்து மர்ம பொருளை கைப்பற்றி, இந்தப் பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும், எதற்காக பயன்படக்கூடிய பொருள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted