பாதுகாப்பு கேட்டு ராணுவ வீரர் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு

Feb 12, 2019 04:53 PM 106

முன்னாள் திமுக கவுன்சிலர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் ராணுவ வீரர் பாதுக்காப்புக் கோரி, வீடியோ பதிவின் மூலம் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்தானம், இவரை மந்திரவாதி என சித்தரித்து, அதே பகுதியை சேர்ந்த டேவிட் என்பவர் சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். இது தொடர்பான புகார் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், டேவிட் அந்த பகுதியில் உள்ள முன்னாள் திமுக கவுன்சிலர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக வாட்ஸ்அப் மூலம் வீடியோ ஒன்றை சந்தானம் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில் குடும்பத்துடன் சேர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், முன்னாள் திமுக கவுன்சிலர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, முன்னாள் திமுக கவுன்சிலர் வெங்கடேசனை சேலையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted