தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படை

Feb 11, 2019 03:14 PM 58

உரி அருகே ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி அருகே ராஜர்வானி என்ற இடத்தில் ராணுவத்திற்கு சொந்தமான பீரங்கிப் பிரிவு முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்த மர்மநபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த பாதுகாப்பு படை வீரர்கள், மர்மநபர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவிவருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவம் மற்றும் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Comment

Successfully posted