பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Mar 15, 2020 03:22 PM 602

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள வத்ரிகாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். தீவிரவாதிகளை சுற்றிவளைத்த போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி அவர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த தாக்குதலில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீர் அமைப்பைச் சேர்ந்த தரிக் அஹமது என்பதும் மற்ற 3 பேர், லஷ்கர் இ தைபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

Comment

Successfully posted