உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் சீமானே பொறுப்பு - நடிகை விஜயலட்சுமி!!

Aug 01, 2020 08:52 PM 1016

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடன் வாழ்ந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறி, நடிகை விஜயலட்சுமி, தன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட முயன்றார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டின் முன், நடிகை விஜயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, சீமானை திருமணம் செய்து கொள்ளவோ, அவருடன் சேர்ந்து வாழவோ துளியும் விருப்பம் இல்லை எனவும், தன்னுடன் வாழ்ந்ததை அவர் ஒப்புக்கொண்டால் போதும் எனவும் கூறினார். சீமானுக்கும் தனக்குமான உறவு, இயக்குநர் அமீருக்கு தெரிந்திருந்தும், அவர் மௌனம் காப்பதாக தெரிவித்த விஜயலட்சுமி, தன்னுடைய உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாகவும், தனக்கு எதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சீமானே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted