திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

Feb 23, 2019 09:44 PM 253

திருச்சி விமான நிலையத்தில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.

மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவை சேர்ந்த ஃபெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண்மணி தனது உடைமையில் ஆயிரத்து 40 கிராம் தங்கச்சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகையை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted