சுய உதவிக்குழுக்களால் பெண்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது!

May 22, 2020 03:26 PM 574

கோவை, குனியமுத்தூர் பகுதி பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவி வழங்கி வரும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குனியமுத்தூரை அடுத்த மூவேந்தர் நகரில் பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பினை வழங்கினார். பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியதுடன், சமூக இடைவெளியைக் கடைபிடித்து முகக் கவசங்கள் அணிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சாஸ்தா சுய உதவி குழுவினருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகவும், தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted