கோயில் நிலங்களை மீட்க தனி குழுக்கள் அமைப்பு

Aug 11, 2018 04:00 PM 832
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 39 ஆயிரத்து 508 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் வாடகைதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 14 ஆயிரத்து 21 பேர் ஆக்கிரமித்து இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted