அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனிப்பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர்

Sep 10, 2019 06:57 PM 102

சென்னை ராஜீவ்காந்தி மருத்துமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், டெங்கு காய்ச்சலினால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted