தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக செப். 18-ல் ஆர்.என். ரவி பதவியேற்பு

Sep 14, 2021 04:39 PM 896

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி, வருகிற சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.

ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண் ரவி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மறுதினம் சென்னை வருகிறார். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று நடைபெறும் விழாவில், தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக அவர் பதவியேற்கிறார். ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஆர்.என்.ரவி, பத்தரிகைத்துறை, உளவுத்துறை, புலனாய்வுக் குழு மற்றும் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comment

Successfully posted