பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி வாக்குமூலம்

Dec 13, 2019 07:07 PM 385

கோவை சீரநாயக்கன் பாளையத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி, மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 26ம் தேதி நண்பருடன் சென்ற பிளஸ் 1 மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. உடன் சென்ற மாணவியின் நண்பரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இந்த சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம், நடந்த சம்பவங்களை மாணவி வாக்குமூலமாக அளித்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் சிறையில் உள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Comment

Successfully posted