வியாசர்பாடி அருகே 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை

Sep 12, 2019 06:56 AM 324

சென்னை வியாசர்பாடி அருகே 4 வயது பெண் குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை வியாசர்பாடி சர்மாநகர் கக்கன்ஜி காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் கூலி வேலை செய்து வரும் இவருடைய மனைவி பெயர் பவானி. இவர்களுக்கு யாழினி என்ற 4 வயது மகளும் . ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர். கணவன் ரமேசுக்கு காசநோய் இருந்ததால் மனைவி பவானி கடந்த 4 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

கணவனை பிரிந்த பவானியுடன் கொடுங்கையூரை பகுதியை சேர்ந்த ஆசிப் என்பவர் திருமணம் செய்யாமல் புழலில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் மகள் யாழினிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் செங்குன்றம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இந்த தகவல் அறிந்த முதல் கணவர் ரமேஷ் உடனே சம்பவ இடத்துக்கு வந்து குழந்தை எப்படி இறந்தது என கேட்டு குழந்தையை பார்த்த போது முதுகு கழுத்து மற்றும் வயிறு பகுதியில்காயம் இருப்பது கண்டு அதிர்ந்து போனார். உடனே தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புழல் காவல் நிலையத்தில் தந்தை ரமேஷ் புகாரும் அளித்தார்.

இதனடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் தங்கதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாழினியின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக இரண்டாவது கணவர் ஆசிப் என்பவரை புழல் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இது கொலையா அல்லது இயற்கை மரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது வாய் பேச முடியாத குழந்தையை தாயின் கண்முன்னே ஆசீப் அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

4 வயது குழந்தை யாழினியை உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு கன்னம் முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும் குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும் கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆசீப் மீது மணலி கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையத்தில் வழிப்பறி கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடந்தது கொலை தான் என உடற்கூறு ஆய்வின் மூலம் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆசிப்ஐ புழல் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted