சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்

May 08, 2021 09:53 AM 438

தமிழ்நாட்டில் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் தமிழக உளவுத்துறை ஏ.டிஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு ஏ.டிஜி.பி.யாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு, தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted