இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும்  வீழ்ச்சி

Aug 16, 2018 12:20 PM 499
அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக,  துருக்கியில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. இதனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 90 காசுகளாக இருந்தது. இந்தநிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும்,  டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 காசுகள் குறைந்து70 ரூபாய் 43 காசுகளாக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.  அந்நியச்செலாவணி சந்தையில் கட்டுப்பாடுகளை விதித்து டாலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும்என்று பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Comment

Successfully posted