கால்களில் ஷூ.....கைகளில் பேருக்கு பூ......

Aug 02, 2020 02:53 PM 599
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாள் (02.08.2020) தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார். முதலமைச்சரை தொடர்ந்து தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். காலில் இருக்க கூடிய செருப்பை கூட கழட்டாமல் நான்கு பூ இதழ்களை எடுத்து போட்டு தன்னுடைய மரியாதையை சுருக்கமாக முடித்து கொண்டார் ஸ்டாலின்.
 
image
 
நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் போது அவர்களுக்கான மரியாதை என்பது மனதில் இருந்து வர வேண்டும். முதலமைச்சர் மரியாதை செலுத்தும் போது அவருடைய கால்களில் செருப்பு இல்லை கைகளில் கொத்தாக பூ இருந்தது. ஆனால் ஸ்டாலின் செலுத்தும் போது கால்களில் ஷூ இருந்தது கைகளில் பேருக்கு பூ இருந்தது. இதிலேயே தெரிந்துவிட்டது யார் உண்மையான மரியாதை செலுத்துகிறார்கள், யார் பேருக்கு மரியாதை செலுத்துகிறார்கள் என்று... நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லாவற்றையும்...

Comment

Successfully posted