சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Nov 19, 2019 08:34 PM 95

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 6 ராணுவ வீரர்களுக்கு ஜம்மு காஷ்மீர் பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்ப்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கினர். இதனையடுத்து சில ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Comment

Successfully posted